சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் நடக்கும் பகிரங்க முறைகேடுகளைத் தோலுரிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் செய்தி வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலத்துல இருக்கிற ஒரு ரேஷன் கடையில் நபர் ஒருவர் தலா 50 கிலோ எடையுள்ள இரண்டு மூட்டைகளில், மொத்தம் 100 கிலோ அரிசியை எந்தவித பயமும் இல்லாமல் எடுத்துச் சென்றுள்ளார்.
இதை அங்கிருந்த செய்தி நிருபர் ஒருவர் நேரில் பார்த்து, “ஒரு நபருக்கு இவ்வளவு அரிசி எப்படி வழங்கப்பட்டது?” என்று தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அந்த நபர் மற்றும் அங்கிருந்தவர்கள் முறையான பதிலளிக்காமல் மழுப்பலாகவும், அலட்சியமாகவும் பதிலளிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
நிருபரின் இந்த அதிரடி கேள்விகள் தற்போதைய நிலையில் இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. “ஒரு நபர் 100 கிலோ அரிசியை இப்படி மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றால், இந்த ரேஷன் அரிசி எங்கே கடத்தப்படுகிறது? இது சேலத்துல இருக்குற மற்ற சாமானிய மக்களின் அரிசிதானே? யாருடைய பங்கை இவர் இப்படி சட்டவிரோதமாக அதிகமாக எடுத்துச் செல்கிறார்?” என்று நிருபர் எழுப்பிய சராமரி கேள்விகள் ஒட்டுமொத்த பொதுமக்களின் குரலாக ஒலித்துள்ளது.
Ena da ithuuu !! pic.twitter.com/HTIoNDdFbW
— 𝐌𝐎𝐍𝐒𝐓𝐄𝐑 (@MONSTER_TVK) May 20, 2026
ஏழை எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த ரேஷன் அரிசி முறைகேடு குறித்து, சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
