சென்னை பெருநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.அமல்ராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ளார். தமிழக உள்துறை இன்று  வெளியிட்டுள்ள புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் பேரில் 2 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில காலமாக காத்திருப்போர் பட்டியலில்இருந்த கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP) டாக்டர் ஏ.அமல்ராஜ் ஐபிஎஸ், தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த திரு. அபிநாத் தினேஷ் மோடக் ஐபிஎஸ் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னை குற்றப்பிரிவு சிஐடி (Crime Branch CID)-யின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ADGP) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்பு அப்பதவியில் இருந்த திரு. டி.எஸ்.அன்பு ஐபிஎஸ்-க்கு பதிலாகப் பொறுப்பேற்பார் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.