அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், தனது காதலன் ஏமாற்றியதை அறிந்த பெண் ஒருவர், ஆர்டர் செய்திருந்த சுமார் 57,000 ரூபாய் ($600) மதிப்புள்ள பிரம்மாண்ட பிறந்தநாள் கேக்கை அப்படியே தீ வைத்து கொளுத்தச் சொன்ன வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சுமார் 75 விருந்தினர்களுக்கு பரிமாறுவதற்காக மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட அந்த சொகுசு கேக் தயாரான சில மணி நேரங்களிலேயே, அந்த பெண்ணுக்குத் தன் காதலனின் துரோகம் தெரியவந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Julie Fradella (@thesweethustle_)

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது பிறந்தநாள் பார்ட்டியை உடனடியாக கேன்சல் செய்ததுடன், அந்த கேக் இனி தனக்கு தேவையில்லை என்றும், அதை அப்படியே தீ வைத்து அழித்துவிடுமாறும் பேக்கரி உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எங்களுக்கு ஏமாற்றுக்காரர்களைப் பிடிக்காது” என்று கூறிய அந்த பேக்கரி காரர், அந்த அடுக்கு கேக்கை தீ வைத்து கொளுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கொளுந்துவிட்டு எரிந்த தீயில் அந்த அழகான கேக் அப்படியே கருகி, உருகி, முழுமையாகக் கறுப்பு நிறமாக மாறும் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், துரோகம் செய்த காதலனுக்கு இது சரியான நெத்தியடி என்றும், காதலியின் இந்த அதிரடி முடிவு செம கெத்து என்றும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.