அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சுட்டுக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் வான்வழியாகக் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 நாட்களாக நீடித்து வந்த இந்தத் தாக்குதல், தற்போது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்காசியப் பகுதியில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதற்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரான் அப்போது சபதம் ஏற்றிருந்தது.
இந்தச் சூழலில், பிரிட்டிஷ் ஊடகமான ‘தி டெலிகிராப்’ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத் தலைவர் இப்ராகிம் அஜிஜி இதுகுறித்து கூறுகையில்,
“ஈரான் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பதிலடி நடவடிக்கையாகப் புதிய வரைவு மசோதா ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க கடற்படைத் தளபதி பிராட் கூப்பர் ஆகிய மூவருமே காமேனி படுகொலைக்கு முக்கியப் பின்னணியாக இருந்து, திட்டமிட்டவர்கள் ஆவர். எனவே, இதற்கான சரியான பதிலடியை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும். இந்த மூவரையும் ‘நரகத்திற்கு அனுப்புபவர்களுக்கு’ (படுகொலை செய்பவர்களுக்கு) ஐரோப்பிய நாணய மதிப்பில் 5 கோடி யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.561 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவர் மஹ்மூத் நபாவியன் கூறுகையில்,
“ஈரான் மீதோ அல்லது அதன் மையத் தலைமை மீதோ நடத்தப்படும் எந்தவொரு நேரடி ராணுவத் தாக்குதலுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும். இந்தத் தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடன் மட்டும் நின்றுவிடாது; அவர்களுடன் கூட்டணி வைத்துச் செயல்படும் அரபு நாடுகளின் மீதும் பாயும்.
உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க, அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேல் பிரதமரின் தலைக்கு ஈரான் கோடிக் கணக்கில் பரிசு அறிவிக்கத் துணிந்திருப்பது சர்வதேச அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
