இந்தியாவில் வசித்து வரும் சாண்ட்ரா ஆன் என்ற உக்ரைனியப் பெண், இந்திய ஜிம்களுக்கும் ஐரோப்பிய ஜிம்களுக்கும் இடையே உள்ள அசாத்தியமான வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின்படி, ஐரோப்பிய ஜிம்களில் மக்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தி, யாரிடமும் பேசாமல் உடற்பயிற்சி செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

இந்தியாவில் நுழைந்தவுடனேயே ஊழியர்கள் உண்மையான நட்புடனும் புன்னகையுடனும் வரவேற்பதாகவும், ஒருவருக்கு உடற்பயிற்சி செய்ய உதவும் “இலவச ஜிம் உதவியாளர்” முதல், கழிவறைகள் மற்றும் உடற்பயிற்சி தளங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கத் தனித்தனி ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sandra On (@dra.sandraa)

“>

இருப்பினும், ஐரோப்பிய ஜிம்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள ஒரே ஒரு குறைபாடாக பாலின சமநிலையின்மையை சாண்ட்ரா சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பாவில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில் உடற்பயிற்சி நிலையங்களுக்கு வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலான ஜிம்கள் ஆண்கள் மட்டுமே அதிகம் நிறைந்த இடமாகவே இருக்கின்றன.

மேலும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக ஆரம்பத்தில் இது தனக்கு சற்றே அச்சமூட்டுவதாக இருந்தபோதிலும், ஒரு நல்ல ஜிம்மைக் கண்டறிந்த பிறகு அந்தப் பயம் மறைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இவருடைய இந்த நேர்காணல் மற்றும் கருத்துக்கள், “இந்திய உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் உடற்பயிற்சி செய்யும் இடங்கள் மட்டுமல்ல, அவை ஒரு சிறந்த சமூகம்” என்ற ரீதியில் பலரது பாராட்டுகளையும் விவாதங்களையும் பெற்று வருகிறது.