சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த சியாங்மிங் என்ற முதியவர், தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருந்தபோதிலும், தனிமையின் கொடுமை தாளாமல் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் நுழையும் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விவாகரத்திற்குப் பிறகு, தனது வீட்டில் தனியாக வாழ்வதற்கும், அங்கேயே இறந்து போவதற்கும் பயந்த அவர், இந்த நாடோடி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்.
மேலும் தனது பாக்கெட்டில் எப்போதும் 50,000 யுவான் ரொக்கப் பணத்துடனும், ஒரு சிறிய கேமராவுடனும் வலம் வரும் இவருக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஹுவாங் என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் நட்பு கிடைத்தது. சியாங்மிங்கின் அவல நிலையைப் பார்த்து இரக்கப்பட்ட ஹுவாங், அவருக்கு உணவு சமைத்துத் தருவது, தலைமுடியை அலசிவிடுவது என ஒரு மகளைப் போல அன்போடு கவனித்துக் கொண்டார்.
இருப்பினும், இந்தச் சொத்து பரிமாற்றத்திற்கு சியாங்மிங்கின் மகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விவாகரத்திற்குப் பிறகு தந்தையுடன் எந்தத் தொடர்பிலும் இல்லாத அவரது மகன், ஹுவாங் தனது தந்தையை ஏமாற்றுவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இறுதியில், அந்த வீடு சியாங்மிங்கின் தாயாரிடமிருந்து பரம்பரையாக வந்த சொத்து என்பதால், நீதிமன்றம் மகனுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இதனால் சியாங்மிங் தனது வீட்டை இழந்தார், ஆனால் அவரது சொத்தை நம்பி உதவவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஹுவாங் தற்போதும் அவரைத் தனது வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து பராமரித்து வருகிறார். இந்தச் சம்பவம் சீன சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதியவர்களின் தனிமை, சொத்துக்காகப் பெற்றோரைத் கைவிடும் பிள்ளைகளின் அவலம் மற்றும் எதிர்பார்ப்பில்லாத மனிதநேயம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் ஒரு கண்ணீர் கதையாக இது மாறியுள்ளது.
