தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்மையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பொதுவாக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அமரும் நாற்காலிகளில் வெள்ளை நிறத் துண்டு போர்த்தப்பட்டிருப்பது நீண்டகால வழக்கமாக இருந்து வருகிறது. இது ஆங்கிலேயர் காலத்து விஐபி கலாச்சாரம் என்றும், இந்தத் துண்டு கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்றும் மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லிசிபிரியா கங்குஜம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் வந்த இந்தச் சிறுமியின் ஒற்றைக் கோரிக்கையை கவனித்த முதலமைச்சர் விஜய், ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாகத் தனது நாற்காலியில் இருந்த வெள்ளை நிறத் துண்டை அகற்ற உத்தரவிட்டு அதிரடி மாற்றம் செய்துள்ளார்.

சிறுமி சொன்னதற்காக இந்த நீண்டகால விஐபி கலாச்சாரத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாக மாற்றிய விதம், அவர் சமூக வலைத்தளங்களை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.