தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், விராட் கோலியின் அபாரமான பீல்டிங் வியூகம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
223 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியபோது, முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் பிரியான்ஷ் ஆர்யா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இந்த விக்கெட்டுக்கு பின்னால் விராட் கோலியின் மிகப்பெரிய ‘மூளை’ செயல்பட்டுள்ளது. பந்து வீசுவதற்கு சில விநாடிகளுக்கு முன்னதாக, கோலி சைகை காட்டி ரொமாரியோ ஷெப்பர்டை ‘மிட்-ஆன்’ திசையில் சற்று நகர்ந்து நிற்கச் சொன்னார்.
அடுத்த பந்தே சரியாக அந்த இடத்திற்குச் செல்ல, ஷஷாங்க் சிங் கொடுத்த கேட்சை ஷெப்பர்ட் கச்சிதமாகப் பிடித்தார். பவுலர் பந்து வீசுவதற்கு முன்பே பேட்டர் எங்கு அடிப்பார் என்பதை கணித்து கோலி செய்த இந்த மாற்றம், சமூக வலைதளங்களில் “கிங் கோலியின் மாஸ்டர் ஸ்டிரோக்” என வைரலாகி வருகிறது.
