தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாற்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலரும் தவெக-வை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வடசென்னை பாமகவின் முக்கிய முகமான வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ‘லயன்’ KS கோபால், பாமகவிலிருந்து விலகி தற்பொழுது தவெக-வில் இணைந்துள்ளார். வி.எஸ். பாபு முன்னிலையில் தனது ஒட்டுமொத்த ஆதரவாளர்களுடன் அவர் தவெக-வில் ஐக்கியமாகியிருப்பது வடசென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​வடசென்னையில் பாமகவின் அஸ்திவாரமாக இருந்த லயன் KS கோபால் திடீரென கட்சி மாறியிருப்பது அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சி நிர்வாகிகள் வரிசையாக விஜய்யின் கட்சியில் இணைந்து வருவது, தவெக-வின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த அதிரடி அரசியல் நகர்வு தற்பொழுது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.