தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக விஜய் ஆன நிலையில் ரஜினிகாந்த் பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது ரஜினிகாந்த் அதை தடுக்க நினைத்தார். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட இரு பெரிய கட்சிகளை கூட்டணிக்கு பேச்சினார் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். அப்படிப் பேசக்கூடிய தரங்கெட்ட ஆள் இந்த ரஜினிகாந்த் கிடையாது.
விஜய் முதலமைச்சர் ஆனதில் எனக்கு பொறாமை என்கிறார்கள். கமல் முதலமைச்சர் ஆனால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா என்று தெரியாது. எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. விஜயின் வெற்றி ஆச்சரியம் கலந்த சந்தோஷம். மேலும் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நட்பின் அடிப்படையில் மட்டும் தான் மு க ஸ்டாலினை தான் சந்தித்து பேசியதாக கூறினார்..
