“நான் சம்பாதித்த பணத்தைக் கூட என்னைச் செலவழிக்க விடாமல் என் பேங்க் அக்கவுண்ட்டை ஆர்த்தியும், சுஜாதாவும் அபகரித்துவிட்டார்கள்” என்று நடிகர் ரவி மோகன் நீதிமன்றத்தில் வைத்துள்ள புகாருக்கு அவரது மாமியார் சுஜாதா அதிரடி விளக்கம் அளித்துள்ளார். “ஒரு கல்யாணம் ஆகி புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் உன் அக்கவுண்ட், என் அக்கவுண்ட் என்று பிரித்துப் பேசுவது எனக்குத் தெரியவில்லை; குடும்பமாக இருக்கும்போது எல்லாமே ஒன்றுதான்” என்று கூறி ரவி மோகனின் பணப் புகாரை அவர் தவிடுபொடியாக்கியுள்ளார்.
மேலும், ரவி மோகனின் மற்றொரு குற்றச்சாட்டுக்கும் சுஜாதா நறுக் பதிலடி கொடுத்துள்ளார். தனது மாமியாரின் மருத்துவச் செலவுக்கு மாதம் 25,000 ரூபாய் அனுப்பியதாக ரவி மோகன் சொல்வது முற்றிலும் பொய் என்று சாடிய அவர், ஒருவேளை அப்படி உண்மையிலேயே அனுப்பியிருந்தால் கூட ஒரு மருமகனாகத் தன் கடமையைத்தான் செய்திருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மாமியாரின் இந்த அடுத்தடுத்த ஓப்பன் டாக் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
