தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பான் இந்திய நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து, ‘கூலி’ படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடிப் பலரையும் கவர்ந்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் சாலையோர காய்கறி வியாபாரம் செய்யும் பெண் ஒருவருடன் பூஜா ஹெக்டே எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்த வைரல் செல்பி மற்றும் ரசிகர்கள் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசிய பூஜா ஹெக்டே, திரையுலகினரை வாழ வைக்கும் ரசிகர்கள் தான் தங்களுக்குக் கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
“ரசிகர்களிடம் நாங்கள் எப்போதுமே ஏற்றத்தாழ்வு பார்த்தது கிடையாது; சூழ்நிலை காரணமாகச் சில மேடைகளில் அவர்களைக் கவனிக்க முடியாமல் போகும்போது, நாங்கள் கெத்து காட்டுகிறோம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சில நேரங்களில் எதிர்பாராமல் நடக்கும் தவறுகளைத் தங்களின் தரப்பிலிருந்தும் கொஞ்சம் யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
