அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் உச்சகட்டமாக வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவைக் கூட்டக் கோரி யாராவது கையெழுத்து கேட்டால் போட்டுவிட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி (EPS) அதிரடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்காக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தீவிரமாகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

​இதையடுத்தே உஷாரான எடப்பாடி பழனிசாமி, தன்னைச் சந்திக்க வரும் கட்சியின் முக்கிய விஐபி-க்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் உள்கட்சி அரசியலை விவரித்துக் கையெழுத்து போட வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தி வருகிறாராம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவரது சொந்த விசுவாசிகளே பொதுக்குழுவைக் கூட்டக் காய்களை நகர்த்தி வருவது, தமிழக அரசியல் களத்திலும் ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்திலும் மெகா பரபரப்பைக் கிளப்பியுள்ளது.