உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு, மணமகன் ஐசியூ வார்டுக்குள்ளேயே வைத்துத் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பூஜா யாதவ் மற்றும் சன்னி யாதவ் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகள் பூஜா கொடூரமான விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார்.

​இருப்பினும், திட்டமிட்ட முகூர்த்த நேரத்திலேயே திருமணம் நடக்க வேண்டும் என்பதில் மணமகன் சன்னி உறுதியாக இருந்தார். மருத்துவமனை அனுமதியோடு மாப்பிள்ளை கோலத்தில் ஐசியூ சென்ற சன்னி, படுக்கையில் இருந்த பூஜாவின் கழுத்தில் தாலி கட்டினார். காதலியைத் தவிக்கவிடாமல் கரம்பிடித்த இந்த நெகிழ்ச்சிச் சம்பவம், தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.