மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சமூக வலைதளப் படங்களை ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி மார்ஃபிங் செய்து, இளைஞர்கள் இருவர் தொடர் மிரட்டல் விடுத்ததால், 17 வயது மதிக்கத்தக்க 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோகா கார்டன் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது தங்கை, அக்கா ஃபேன் காற்றில் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்திருப்பதைப் பார்த்து உறைந்துபோய் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சோலா பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அந்த மாணவியின் சமூக வலைதளப் படங்களை டவுன்லோட் செய்து, ஏஐ டூல்ஸ் மூலம் அசிங்கமாக எடிட் செய்து வச்சுக்கொண்டு, தங்களை வந்து நேரில் சந்திக்காவிட்டால் இந்த ஆபாசப் படங்களை இணையத்தில் வைரலாக்கிவிடுவோம் என்று நீண்ட நாட்களாக மிரட்டி, மனரீதியாகக் சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும், பள்ளிக்குச் செல்லும் வழியிலும் மாணவியைத் தொடர்ந்து பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளனர். அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த இந்தத் தீவிர முடிவு குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த இரண்டு காமப்பேய்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
