அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (மே 15, 2026) வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
உலகப் பொருளாதாரத்தின் இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதற்றங்களைக் குறைப்பது, உலகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 525 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தில் நிலவி வரும் சுங்கவரி விவாதங்களுக்குத் தீர்வு காண்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த உற்பத்தி, விவசாயம் மற்றும் எரிசக்தி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் சுமுகமான முறையில் விவாதித்தனர்.
இந்த முக்கிய அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அரசு விருந்தின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இருக்கையை விட்டு சற்று நகர்ந்த நேரத்தில், அவரது மேஜையில் இருந்த ஒரு கோப்பை டொனால்ட் டிரம்ப் எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
ट्रंप जी ने ये क्या किया!
शी जिनपिंग जब अपनी जगह से थोड़ी देर के लिए हटे तो उनकी नोटबुक में झांक लिया! 🤓
लिखा तो मैंडरिन में होगा फिर समझ क्या आया होगा 😁 pic.twitter.com/3Ex65sP40s
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) May 15, 2026
“>
இந்தச் சிறு கிளிப் இணையத்தில் மீம்ஸ் திருவிழாவாக மாறி, நெட்டிசன்கள் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. “பக்கத்து சீட்டு மாணவனின் நோட்டுப் புத்தகத்தை எட்டிப் பார்க்கும் பள்ளி மாணவனைப் போல டிரம்ப் செய்கிறார்” என்றும், “எட்டிப் பார்த்தாலும் சீன மொழி புரியாததால் டிரம்ப் ஃபைலை மூடிவிட்டார்” என்றும் பலரும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
