சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹைஃபெங் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 2026 ஜூலை 8 அன்று நெஞ்சை உலுக்கும் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளி ஒருவர் ஆடைகளை மடித்து அடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, அவரது சிறு குழந்தை அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக, துணிகள் மற்றும் கனமான உடைகள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கொள்கலனுக்குள் அந்தச் சிறு குழந்தை ஏறியுள்ளது. இதனை கவனிக்காத அவனது தாயும், அங்கு பணிபுரிந்த மற்ற ஊழியர்களும் அடுத்தடுத்து ஆடைப் பொதிகளை அதன் மீது தொடர்ந்து அடுக்கியுள்ளனர். இதனால் ஆடைகளுக்கு அடியில் முழுமையாகப் புதையுண்ட அந்தக் குழந்தை, வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது.
El 07/08/26, en una fábrica de ropa de Haifeng, provincia de Guangdong (China), un niño pequeño se metió por accidente en un contenedor lleno de telas y ropa pesada mientras su madre, una trabajadora que doblaba y movía ropa a su lado, junto con otros empleados, apiló más tela… pic.twitter.com/Lvg6KxPKZD
— Anxious Vids🔥 (@Anxiousvids) May 14, 2026
“>
மேலும் நீண்ட நேரமாகத் தேடியும் குழந்தை கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பின்னர் அந்த ஆடைக் குவியலை அகற்றிப் பார்த்தபோது குழந்தை சுயநினைவின்றி மூச்சுத்திணறிய நிலையில் மீட்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், துரதிர்ஷ்டவசமாக மூச்சுத்திணறல் காரணமாக அந்தப் பிஞ்சு உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளில் நிலவும் பணிச்சுமை மற்றும் கவனச்சிதறல் காரணமாக, பெற்றோர் கண்முன்னேயே நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், பணியிடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் பணிச்சூழல் குறித்த பலத்த விவாதங்களையும், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
