அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பெவன் என்பவர், 1997-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 18 முறை லாட்டரி வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு காரை பரிசாக வென்றதில் தொடங்கிய இவரது அதிர்ஷ்டம், ஒருமுறை 2 லட்சம் டாலர் (சுமார் ரூ. 1.9 கோடி) ஜாக்பாட் வரை நீடித்தது.
சமீபத்தில் ‘கிங் ஸ்க்ராட்ச்’ விளையாட்டில் 50,000 டாலர் (சுமார் ரூ. 48 லட்சம்) வென்றதன் மூலம், தனது 18-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இவரது தொடர் வெற்றிகளுக்குப் பின்னால் ஏதேனும் கணக்கீட்டு சூத்திரங்களோ அல்லது மாய எண்களோ இருக்குமோ என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, ராபர்ட் ஒரு நெகிழ்ச்சியான பதிலை அளித்துள்ளார்.
View this post on Instagram
“>
தனது ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னணியில் தனது மனைவிதான் இருக்கிறார் என்றும், இருவரும் இணைந்து டிக்கெட் வாங்கி அந்த நேரத்தைச் செலவிடுவதையே தாம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். “பணம் வெறும் காகிதம், என் மனைவிதான் உண்மையான ஜாக்பாட்” என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் பலரது மனதைத் தொட்டு வைரலாகி வருகிறது.
