பிரான்சை சேர்ந்த 19 வயது இளம் பெண் கிளெலியா வெர்டியர். ஜூன் 2025-ல் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இவரை, மருத்துவர்கள் மூன்று வாரங்கள் மருத்துவ ரீதியாகத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்றனர். உடல் படுக்கையில் முடங்கிக் கிடந்தாலும், கிளெலியாவின் ஆழ்மனம் ஏழு ஆண்டுகால வாழ்க்கையை அந்த மூன்று வாரங்களில் கற்பனையாக வாழ்ந்து முடித்துள்ளது.

சுயநினைவு திரும்பியதும், தான் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்று நம்பிய கிளெலியா, அவர்களைத் தேடி மருத்துவர்களிடம் கதறியுள்ளார். கோமாவில் இருந்தபோது மிலா, மைல்ஸ் மற்றும் மெலி என தன் குழந்தைகளுக்குப் பெயரிட்டு, அவர்களுக்கு உணவூட்டி, தாலாட்டுப் பாடிய நினைவுகள் நிஜத்தைப் போலவே அவருக்குத் தோன்றியுள்ளது.

தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை, தான் தாயாகவில்லை என்ற கசப்பான உண்மையை அறிந்தபோது கிளெலியாவின் இதயம் நொறுங்கியது. நரம்பியல் நிபுணர்கள் இதனை ‘கோமா கனவு’ அல்லது ஒரு வகையான தீவிர பிரமை என்று விளக்குகிறார்கள்.