சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டெக் மகிந்திராவின் (Tech Mahindra) குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் திடீரெனப் பிடித்த தீ, மளமளவென அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியதால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

​தீ விபத்தை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவனத்தில் இருந்த அனைத்து ஐடி ஊழியர்களும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தினால் காரப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.