புது தில்லி இரயில் நிலையத்தில் இந்தோனேசியப் பெண் ஒருவருக்கு இந்திய முதியவர் ஒருவர் செய்த உதவி, தற்போது இணையதளங்களில் வைரலாகி பலரது மனங்களையும் வென்றுள்ளது. அந்தப் பெண் இரயிலின் வாசல் அருகே நின்று கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது துப்பட்டா நழுவி இரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் தண்டவாளத்தில் விழுந்தது.

இதைக் கவனித்த அவ்வழியே சென்ற ஒரு முதியவர், சிறிதும் யோசிக்காமல் உடனடியாகத் தண்டவாளத்தில் குதித்து அந்தத் துப்பட்டாவை மீட்டுத் தந்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அந்தப் பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிந்துள்ளார். அந்த முதியவர் துப்பட்டாவை மீட்டுத் தந்த கையோடு, எவ்வித கைம்மாறும் எதிர்பாராமல் நடந்துகொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Indah A.L ᢉ𐭩 (@indaha.l)

“>

இதனால் ஒரு நன்றியைக்கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து அமைதியாக நடந்து சென்றது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், “நிஜ வாழ்க்கையின் நாயகன்” என்றும் “இந்தியாவின் உண்மையான பெருமை” என்றும் அந்த முதியவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.