பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ், தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குத் தனது வீடியோ பதிவின் மூலம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் குறித்துப் பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், “நாங்கள் எங்கேயும் ஓடிவிடவில்லை, இங்கே தான் இருக்கிறோம்” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மக்கள் உண்மையை அறியாமல், வெறும் வதந்திகளை மட்டுமே பார்த்துத் தன்னைத் தவறாகச் சித்தரிப்பதாக அவர் மிகுந்த மனவேதனையுடன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ​மேலும், தனது தனிப்பட்ட வேதனையை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றும், சமூக வலைதளங்களில் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையல்ல என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். “முழுமையாகத் தெரியாமல் எதற்காகக் குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

கெனிஷா பிரான்சிஸின் இந்தத் திடீர் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் யாரைக் குறிப்பிட்டு இப்படிப் பேசினார் என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. அவரது இந்த ஆக்ரோஷமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.