பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கான சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்த மொபைல் போன்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மொபைல் போன் என்ற தீங்கிலிருந்து குழந்தைகளைத் தூர வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தனது சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் காட்டிய அஃப்ரிடி, தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகும் வரை தான் மொபைல் போன் வாங்கிக் கொடுக்கவில்லை என்ற சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார்.

பிள்ளைகளை வளர்ப்பதில் தாய்க்கு மட்டுமல்லாமல், தந்தைக்கும் சமமான பங்கு உண்டு என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது மிகப்பெரிய தவறு என்றும், ஐந்து வயது வரை அவர்களுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அஃப்ரிடி கூறியுள்ளார்.

பெற்றோரை விடச் சிறந்த ஆசிரியர் வேறு யாரும் இல்லை என்பதால், ஐந்து வயது வரை குழந்தைகளைச் சிறப்பாக வளர்ப்பதே பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும்.

“>

 

பாகிஸ்தான் அணிக்காகப் பல சாதனைகளைப் படைத்துள்ள அஃப்ரிடி, 398 ஒருநாள் போட்டிகள், 99 டி20 மற்றும் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.