தமிழக முதல்வர் தளபதி விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்கு சிவசேனா வாழ்த்துக்களையும் அதே சமயம் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக மற்றும் அதிமுகவின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்து வெற்றி பெற்றுள்ளதை வரலாற்றுச் சாதனை என்று சிவசேனாவின் ‘சாம்னா’ இதழ் பாராட்டியுள்ளது.
பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு முன்னுரிமை அளித்தது விஜய்யின் தேசியப் பற்றைக் காட்டுவதாகக் குறிப்பிட்ட சிவசேனா, 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்குத் தனி பாதுகாப்புப் பிரிவு போன்ற அவரது அதிரடி முடிவுகளையும் வரவேற்றுள்ளது.
இருப்பினும், டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்ற தலைவர்களின் அரசியல் அழுத்தங்களைச் சமாளிப்பது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
ஆட்சி நிலத்தன்மை மற்றும் மாநிலத்தின் 10 லட்சம் கோடி கடன் போன்ற சிக்கல்களை அவர் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளித்ததால் அதிருப்தியில் உள்ள ஸ்டாலின் அவர்களை, பாஜகவின் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்றும், நாட்டின் நலன் கருதி மோடி – ஷா கூட்டணியின் தந்திரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் உத்தவ் தாக்கரே தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
