சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள், பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு காட்டுப்பகுதியில் 19 வயதான கோகுல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், சிறுவர்களுக்கும் கோகுலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த மூன்று சிறுவர்களும் சேர்ந்து கோகுலை கத்தியால் குத்தியும், முகத்தைச் சிதைத்தும் கொடூரமாகக் கொலை செய்தனர். அதன்பின்னர், சடலத்தை வீடியோ எடுத்து ஆக்ரோஷமாகக் கூச்சலிட்ட சிறுவர்களை, சத்தம் கேட்டுத் திரண்ட பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று, சிறுவர்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி கோகுல் அவர்கள் வீட்டில் போட்டுக் கொடுத்ததே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்துள்ளது.
தனது வீட்டில் சிகரெட் பழக்கத்தைச் சொன்னதால் ஆத்திரத்தில் சிறுவர்கள், திட்டமிட்டே இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
