இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தளபதியாக இருக்கும் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி வரும் மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு கிருஷ்ண சுவாமிநாதன் பொறுப்பேற்க உள்ளார்.

பொறுப்பேற்பதற்கு முன்பே தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அவர், எல்லை தாண்டி வரும் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தால் இந்தியா நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பதிலடியாகவே ‘ஆபரேஷன் சிந்துர்’ நடத்தப்பட்டது என்று விளக்கமளித்தார்.

இந்தியா எப்போதுமே மற்ற நாடுகள் மீது தானாக அத்துமீறலைத் தொடங்குவதில்லை என்றும், ஆனால் எல்லை தாண்டி யாராவது அத்துமீறினால் அவர்களை அடக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ண சுவாமிநாதனின் இந்தப் பேச்சு இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.