தமிழகத்தில் மதுவிலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ள முதலமைச்சர் விஜய், கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வெளியான முதல் நாளிலேயே, அதற்கான பணிகள் மின்னல் வேகத்தில் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக 50 டாஸ்மாக் கடைகள் இன்று அதிரடியாகப் பூட்டப்பட்டன.

கோயில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதல்வர் எடுத்துள்ள இந்த ‘டாஸ்மாக் அதிரடி’க்குத் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீதமுள்ள கடைகளும் படிப்படியாக மூடப்படும் என்பதால், மதுப்பிரியர்கள் மத்தியில் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.