தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, முதலமைச்சர் விஜய் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் முதல்முறையாகக் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், நாளை சட்டசபையில் நடைபெறவுள்ள முக்கியமான ‘நம்பிக்கை வாக்கெடுப்புக்கு’ முன்னதாக இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஆட்சியைத் தக்கவைப்பதற்கான ஆதரவு மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏற்கனவே விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவைத் திரட்டியுள்ள விஜய், தற்போது நேராகக் காங்கிரஸ் தலைமையகத்திற்கே சென்று ஆதரவு கோரியிருப்பது, தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.