கல்விய ஆன்லைனில் தொடருங்கள் மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பேச்சில் பெரும் மர்மம் ஒளிந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதையே பிரதமரின் இந்தப் பேச்சு காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியை மறைக்கவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகக் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.

​ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, நாடு கடும் நெருக்கடியைச் சந்திக்கப் போவதை மோடியின் பேச்சு கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் போக்குவரத்து மற்றும் மின்சாரத் தேவையை குறைக்க மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பிரதமர் வலியுறுத்துவதாகக் கெஜ்ரிவால் சந்தேகம் எழுப்பியுள்ளார். நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மக்களிடம் மறைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக அவர் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.