தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்று கொண்ட நிலையில், இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பேசிவரும் நிலையில் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார்.
முன்னதாக டிடிவி தினகரன் மன்னார்குடி எம்எல்ஏவை காணவில்லை என்றும் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் பேசியதாகும் குற்றம் சாட்டிய நிலையில் பின்னர் தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட ஆதரவு கடிதம் போலியானது எனவும் காமராஜ் கையெழுத்து போடுவது போன்ற வீடியோ ஏஐ எனவும் கூறினார். அதன்பிறகு காமராஜும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கிடையாது என்றும், முதல்வர் விஜய் ஒரு பேட்டி கொடுத்தால் நான் பதவியை விட்டு விலகுகிறேன் என்றும் கூறினார்.
மேலும் இந்த நிலையில் பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்து விடுவோம் என்றும் இளைஞர்கள் இந்த முறை அதிக அளவில் அரசியலுக்கு வந்துள்ளார்கள் எனவும் முதல்வரும் இளைஞராக இருப்பதாகவும் அவருக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் போலீசாரும் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார்..
