தமிழகச் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (மே 12) களைகட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கன்னிப் பேச்சை  அவையில் பதிவு செய்துள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “இந்தப் பேரவையைப் பொறுத்தவரை அனைவரும் சமம்; ஒரு உறுப்பினரே உள்ள கட்சியின் குரலுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும்” என அதிரடியாக முழங்கினார்.

சட்டமன்ற ஜனநாயகத்தில் சிறிய கட்சிகளுக்கும் சம உரிமை உண்டு என அவர் பேசியது அவையில் இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், சட்டமன்றத்தில் முதன்முறையாகக் குரல் கொடுத்த விஜய்யின் இந்தப் பேச்சு, அரசியல் நாகரிகத்தின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுவதோடு, சமூக வலைதளங்களிலும் செம வைரலாகி வருகிறது.