மத்தியப் பிரதேச மாநிலம் முரைனாவில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வில், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி வெளிப்படையாகத் தேர்வில் முறைகேடு  செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி, மாணவர்கள் ஒருவருக்கொருவர் துண்டுச் சீட்டுகளை மாற்றிக்கொள்வதும், புத்தகங்களைப் பார்த்து எழுதுவதும் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

“>

 

இந்தச் சம்பவம் அம்மாநிலக் கல்வித் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களையும் பெற்று வருகிறது.