தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கட்சி தொடங்கிய இரண்டு வருடத்தில் இன்று முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார். நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களை பிடித்த நிலையில் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி முஸ்லிம் லீக் கட்சி ஆகியோர் ஆதரவு கொடுத்ததால் 120 என்ற பெரும்பான்மையின் நிரூபித்து இன்று முதல்வராக பொறுப்பேற்றார்.

அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை திரிஷா கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பின் விஜய் பேசியதை கேட்டு அவர் கண் கலங்கி அழுதார். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது முதலமைச்சர் விஜய் எனக்கு எத்தனையோ அவமானங்கள் வந்தபோது அதையெல்லாம் தாண்டி நீங்கள் என் கூடவே இருந்தீர்கள். நீங்கள் அந்த அவமானத்தை சந்தித்தபோது மனம் தளராமல் நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்தீர்கள் என்று பேசிய போது திரிஷா கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.