தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வீரபாண்டியன்  சில ‘அட்வைஸ்’கூறியுள்ளார்.

தவெக-வுக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆளுநர் அழைக்காததை இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டித்த நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் ஏன் இன்னும் மௌனம் காக்கிறார் என்ற கேள்விக்கு வீரபாண்டியன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “ஆளுநரின் போக்கை நாங்கள் கண்டிப்பது ஒருபுறம் இருந்தாலும், இனி விஜய் அவர்கள் மௌனம் கலைத்துப் பேச வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்காக அவர் உரத்த குரலை எழுப்ப வேண்டிய நேரம் இது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரியணையில் அமரப்போகும் விஜய்க்கு இடதுசாரிகளும் இதர ஜனநாயக சக்திகளும் எப்போதும் அரணாக இருப்போம் என உறுதி அளித்த வீரபாண்டியன், மக்களின் நலனுக்காக விஜய் ஆக்ரோஷமாகக் களமிறங்க வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.