தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசை உருவாக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.
108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏற்கனவே காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மற்ற தோழமைக் கட்சிகளையும் விஜய்க்கு ஆதரவு அளிக்க வைக்க அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, விசிக தலைவர் திருமாவளவனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்ட கார்கே, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு தவெகவிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
118 என்ற மேஜிக் எண்ணை எட்ட இன்னும் சில இடங்களே தேவைப்படுவதால், திருமாவளவனின் முடிவு இந்த அரசியல் ஆட்டத்தில் மிக முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
