இன்ஸ்டாகிராம் நிறுவனம் ‘இன்ஸ்டென்ட்’ என்ற புதிய ஆப்பை இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. நாம் அன்றாடம் சந்திக்கும் உண்மையான தருணங்களை எடிட் செய்யாமல் அப்படியே பகிர்வதற்காக இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மொபைல் கேலரியில் இருக்கும் பழைய புகைப்படங்களை அப்லோடு செய்ய முடியாது; ஆப்பில் உள்ள கேமரா மூலம் அப்போது எடுக்கும் படங்களை மட்டுமே பகிர முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த ஆப்பில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும், மேலும் அவை 24 மணி நேரத்திற்குள் தானாகவே மறைந்துவிடும்.
சில இடங்களில் இது தனி ஆப் ஆகவும், சில இடங்களில் இன்ஸ்டாகிராமின் ஒரு பகுதியாகவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புகைப்படங்கள் உண்மையானதாகவும், எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
