தமிழகத்தில் நிலவும் இழுபறியான அரசியல் சூழலில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்காத நிலையிலும், தார்மீக அடிப்படையில் தவெக-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

​கனிமொழியின் இந்த அதிரடி முன்னெடுப்பு, தமிழக அரசியலில் நிலவி வந்த திமுக – அதிமுக கூட்டணி குறித்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. விஜய்யின் கட்சிக்கு ஆதரவாக கனிமொழி வெளிப்படையாகக் குரல் கொடுத்திருப்பது, சட்டமன்றத்தில் புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாக வாய்ப்புள்ளதை உணர்த்துகிறது. இந்தத் திடீர் திருப்பத்தால் தமிழக அரசியல் களம் முன்பை விட இப்போது பலமடங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.