தமிழகத்தில் இன்று +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் வாய்ப்பை இழந்த மாணவ-மாணவிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ள அவர், மாணவர்களின் உழைப்பைப் பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

​அதேவேளையில், தேர்வில் வெற்றி பெறத் தவறிய மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். “வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மீண்டும் முயற்சி செய்யுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும்” என அவர் கூறியுள்ள ஆறுதல் வார்த்தைகள், மாணவர்களிடையே பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரிசல்ட் வெளியான சில நிமிடங்களிலேயே விஜய் பகிர்ந்துள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.