தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி மற்றும் குதிரை பேரம் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு விடுத்த அதிரடி கட்டளை இடியாய் இறங்கியுள்ளது.

“உங்க முன்னாடி 10 கோடி ரூபாயை தூக்கி வீசினாலும், நம்ம தலைவர் விஜய்யோட முகத்தை ஒருமுறை நினைச்சுப் பார்த்துட்டு நேர்மையா நடந்துக்கோங்க” என அவர் உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளது இப்போது செம வைரலாகி வருகிறது. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் தவெக-வுடன் கைகோர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என நம்பிக்கை ஊட்டியுள்ள அவர், எக்காரணம் கொண்டும் தொண்டர்களோ, எம்.எல்.ஏ-க்களோ குழப்பமடைய வேண்டாம் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார்.

மெஜாரிட்டிக்குத் தேவையான அந்த 6 இடங்களுக்காக மற்ற கட்சிகளிடம் பேரம் பேசப்படலாம் என ஆளுநரே கவலை தெரிவித்துள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்தின் இந்த ‘நேர்மை’ அட்வைஸ் திமுக மற்றும் அதிமுக கூடாரங்களை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.