சமூக வலைதளங்களில் தற்போது ஜப்பானிய திருமண வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் ‘ஓஜிகி’ எனப்படும் குனிந்து மரியாதை செய்யும் முறை மிகவும் முக்கியமானது. பொதுவாக திருமணத்தின் போது மணமக்களும் ஒருவருக்குக்கொருவர் குனிந்து மரியாதை செய்வார்கள்.

ஆனால் இந்த வீடியோவில், மணமகன் தனது மணப்பெண் மீதுள்ள அன்பையும் மரியாதையையும் காட்ட, சாதாரணமாகக் குனிவதற்குப் பதிலாக தரைவரை சென்று முழுமையாக விழுந்து வணங்கினார்.

இதைப் பார்த்த மணப்பெண் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதோடு, அங்கிருந்த விருந்தினர்களும் ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ந்தனர்.

ஜப்பானிய திருமணங்களில் இந்தச் சடங்கு ஒருவருக்கொருவர் காட்டும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. யார் அதிகமாகக் குனிந்து மரியாதை செய்கிறார்களோ, அவர்கள் மற்றவர் மீது அதிக மதிப்பும் அன்பும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by 偃师偃师 🖤 (@korean_love_story_78)

“>

மணமகனின் இந்த வேடிக்கையான அதேசமயம் நெகிழ்ச்சியான செயல், உறவுகளில் அகங்காரம் பார்க்காமல் அன்புக்கு அடிபணிவதைக் காட்டுவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜப்பானிய கலாச்சாரத்தின் அழகையும், தம்பதிகளுக்கு இடையிலான ஆழமான பிணைப்பையும் இந்த ஒரு வீடியோ உலகிற்கு உணர்த்தியுள்ளது.