கடந்த 2022-ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வருங்காலத்தை கணிப்பவர்’ என்று குறிப்பிட்டிருந்த அந்த மர்ம நபர், 2023-ல் கொரோனா முடியும் என்றும் 2026-ல் ‘ஹண்டாவைரஸ்’ பரவும் என்றும் பதிவிட்டிருந்தார்.

தற்போது ‘எம்வி ஹோண்டியஸ்’ என்ற சுற்றுலா கப்பலில் இந்த வைரஸ் பரவி, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பழைய பதிவு உண்மையாகிவிட்டதோ என நெட்டிசன்கள் பலவிதமான சதித் திட்டக் கோட்பாடுகளைப் பேசி வருகின்றனர்.

இருப்பினும், இந்த வைரஸ் பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதால், இந்தப் பதிவு வெறும் தற்செயலான ஒன்றாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எலிகள் மூலம் பரவக்கூடிய இந்த ஹண்டாவைரஸ், மனிதர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

“>

 

இது கொரோனா போல ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவாது என்றாலும், இதில் ‘ஆண்டிஸ்’ வகை வைரஸ் மட்டும் மனிதர்களிடையே பரவும் வாய்ப்புள்ளதால், சுகாதாரத் துறை அதிகாரிகள் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.