தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைப் பிடித்தும் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

“நம்மள சுத்தி நிறைய அரசியல் மாற்றங்கள் நடக்குது; மக்கள் ரொம்ப ஆசையா ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்காங்க. நாம ஒரு விஷயத்தை நினைச்சு மகிழ்ச்சியா இருக்கும்போது, எதிர்பாராத திருப்பங்கள் வந்து அதைத் தடுப்பது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு” என்று தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ள அவர், மக்கள் எதிர்பார்க்கும் அந்த நல்ல விஷயம் (விஜய் ஆட்சி அமைப்பது) சீக்கிரம் நடக்க வேண்டும் என சூசகமாகப் பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, இந்த இக்கட்டான சூழலில் தவெக-வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது தொண்டர்களிடையே செம வைரலாகி வருகிறது.

“>