கார்ப்பரேட் உலகில் 11 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றிய 35 வயதான பிஸ்வஜித் மொகந்தி, தனது வேலையைத் துறந்து வெளியேறியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனது வேலையில் மனநிறைவோ அல்லது சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திருப்தியோ இல்லை என்பதை உணர்ந்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இது குறித்துச் சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

“பணம் ஒரு தடையாக இல்லையென்றால் இந்த வேலையைத் தொடருவேனா?” என்ற கேள்வியே அவரை இந்த மாற்றத்தை நோக்கித் தள்ளியுள்ளது.

உயர்ந்த கண்ணாடி கட்டிடங்களுக்குள் அமர்ந்து வேலை செய்வதை விட, தனது நேரம் மற்றும் ஆற்றலுக்கு மதிப்பளிப்பதே முக்கியம் என்று அவர் கருதுகிறார். சம்பளம் மற்றும் பதவி உயர்வை விட மன அமைதியே மேலானது என்று அவர் பகிர்ந்த வீடியோ, கார்ப்பரேட் அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Biswajit Mohanty (@biswajit.yogicreset)

“>

நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கண்டு அஞ்சாமல், தனக்குப் பிடித்தமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேடி அவர் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவிற்கு இணையத்தில் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.