ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், அந்த குழந்தையின் உருவ அமைப்பைக் கண்டு தாய் மற்றும் தந்தை இருவரும் பெரும் அதிச்சியடைந்தனர். தந்தைக்கும் மகளுக்கும் இடையே எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாததால், குடும்பத்தில் சந்தேகம் எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தந்தை, உண்மை என்னவென்று அறிய டிஎன்ஏ சோதனை செய்ய முடிவு செய்தார்.
இந்த சோதனையின் முடிவு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது, இது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. இந்த சோதனையில் அந்த குழந்தைக்கும் தந்தைக்கும் எந்த ஒரு மரபணு தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தீவிர விசாரணைக்கு பிறகு ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது.
View this post on Instagram
“>
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் குழந்தைகள் மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு மிகப்பெரிய குளறுபடி நடந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த உண்மை வெளிவந்த பிறகு, அந்த தந்தை கடும் அதிர்ச்சியில் உறைந்து போனார், மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
