தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் நேற்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு முடிவெடுப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில் தற்போது இன்று காலை 11 மணியளவில் தங்களுடைய முடிவை அறிவிப்பதாக க்ரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார். மேல் ஏற்கனவே கே.சி வேணுகோபால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.