தென் கொரியாவில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தூக்கமின்மை பிரச்சினையை போக்கவும், தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ‘பவர் நேப்’ என்ற வினோதமான தூக்கப் போட்டி நடத்தப்பட்டது. சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் நடந்த இந்தப் போட்டியில் சுமார் 170 பேர் கலந்துகொண்டனர்.
சும்மா கண்ணை மூடி படுத்திருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது; போட்டியாளர்களின் இதயத் துடிப்பைக் கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டு, 2 மணி நேரத்தில் யார் மிகவும் அமைதியாகவும், ஆழ்ந்தும் தூங்குகிறார்கள் என்பதை வைத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
சுற்றியிருக்கும் சத்தங்கள் மற்றும் தொந்தரவுகளைக் கடந்து ஆழ்ந்த தூக்கத்தை வெளிப்படுத்திய 80 வயது முதியவர் ஒருவர் இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து 37 வயதுடைய அலுவலகப் பணியாளர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பல இளைஞர்கள் சவாலுடன் கலந்து கொண்ட போதிலும், ஒரு முதியவர் முதலிடம் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்படும் இந்தப் போட்டி, தற்போது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
