தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் விஜய் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @actorvijay pic.twitter.com/y327GIRDWh— Shritharan Sivagnanam (@ImShritharan) May 5, 2026
“>
தமிழக அரசியலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அண்டை நாடான இலங்கையின் நாடாளுமன்றத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
