தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரலாறு காணாத வகையில் 74 வருட அரசியலையே புரட்டி போட்டுள்ளார். அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் என்பது பிரிந்து வரும் நிலையில் வெளிநாட்டுகளிலிருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் கிட்டத்தட்ட 108 இடங்களை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறார். இன்னும் பெரும்பான்மைக்கு பத்து இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அர்ச்சனா எம்பி நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, இலங்கை தமிழர்களின் நெஞ்சை கவர்ந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்க இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கச்சதீவை கேட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக நீங்கள் அவரிடம் ஒப்படைக்க தான் வேண்டும். பச்சைத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து விஜயிடம் கொடுங்கள். தமிழக மக்கள் கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

மேலும் இதே போன்று பாராளுமன்றத்தில் மற்றொரு எம்பி கூறுகையில் தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அடிப்படையில் தமிழகத்தில் வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜய் அவர்களுக்கு முதலில் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மற்றொரு எம்.பியும் கூறினார். தமிழ்நாடு மக்களோடும் தமிழக அரசோடும் நாங்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு காத்திருக்கிறோம் என்றும் கூறினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ada Derana Tamil (@adaderana_tamil)