தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக காலை 8:00 மணி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நிலையில் காலை முதலே திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளின் முன்னிலையில் இருக்கும் நிலையில் தற்போது கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். இதேபோன்று சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்களை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்கள்.