திரையுலகில் போட்டி இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நட்பை மதிக்கத் தெரிந்தவர் நடிகர் அஜித் குமார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது நண்பர் விஜய்யை விமர்சித்த நடிகரை, தனது படத்தில் இருந்து நீக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் ‘ஏ.கே. 64’ படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபல நடிகர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த நடிகர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகவும் தரக்குறைவாகவும், மோசமாகவும் விமர்சித்துப் பேசியுள்ளார். இது அஜித் குமாரின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக இயக்குநர் ஆதிக்கை அழைத்த அஜித், “நண்பன் விஜய்யை இவ்வளவு மோசமாகப் பேசியவருடன் என்னால் இணைந்து நடிக்க முடியாது. அந்த நடிகரை மாற்றிவிட்டு வேறு ஒருவரைப் பணியமர்த்துங்கள் என்று கறாராகக் கூறிவிட்டாராம். அஜித்தின் இந்த முடிவை ஏற்று, அந்த நடிகரை படத்திலிருந்து நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
அஜித்தின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் “நன்றி ஏ.கே. ஐயா” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் விஜய்யைத் தீவிரமாக விமர்சித்த அந்த நடிகர் யாராக இருக்கும் என்ற விவாதமும் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளது. சினிமாவை விட்டு அஜித் விலகப் போகிறார், ஏ.கே. 64 படம் கைவிடப்பட்டது எனப் பரவிய வதந்திகளுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன:
‘ஏ.கே. 64’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித் இணையப் போகிறார். கங்குவா படத்திற்குப் பிறகு சோர்வாக இருக்கும் சிவாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த வாய்ப்பை அஜித் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் ‘மங்காத்தா’ போன்ற ஒரு மெகா ஹிட் படத்தை வழங்கிய வெங்கட் பிரபுவுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பை அஜித் உறுதி செய்துள்ளாராம். மங்காத்தாவை விட மாஸான ஒரு படத்தை எடுக்க வெங்கட் பிரபு தயாராகி வருகிறார்.
